வவுனியாவில் தாதியர் கல்லூரி நடத்தி வந்த 5 நிர்வாகிகள் கைது

#Arrest #Women #Lanka4 #money #Nurse #Fraud #L4
Prasu
2 hours ago
வவுனியாவில் தாதியர் கல்லூரி நடத்தி வந்த 5 நிர்வாகிகள் கைது

வவுனியா வைரவபுளியங்குளம் 7ம் ஒழுங்கையில் அமைந்துள்ள தனியார் தாதியர் கல்லூரியில் இன்று குழப்பநிலை ஒன்று ஏற்பட்டமையால் பொலிசார் வரவழைக்கப்பட்டனர்.

குறித்த தனியார் தாதியர் கல்லூரியில் தாதிய கற்கைநெறிகளை பயில்வதற்காக மாணவர்களிடம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதற்காக ஒவ்வொரு மாணவர்களிடம் இருந்தும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பணம் பகுதி பகுதியாக அறவிடப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

பதிவுகள் மேற்கொள்ளும் போது கற்கை நெறி முடிவில் அங்கிகாரமுள்ள சான்றிதழான TVEC வழங்கப்படும் என கல்லூரி நிர்வாகிகளால் மாணவர்களுக்கு கூறப்பட்டுள்ளது. 

எனினும் கற்கை நெறிமுடிவடைந்து நீண்ட நாட்களாகியும் மாணவர்களுக்கு அந்த சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் இன்று அந்த பகுதியில் குழப்ப நிலை ஏற்ப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் கல்லூரி நிர்வாகிகள் எனக்கூறப்படும் ஐந்து பேரை கைதுசெய்தனர். அவர்கள் நாளை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4