பாலஸ்தீன அமைப்பிற்கு எதிரான தடையை உறுதி செய்த லண்டன் நீதிமன்றம்
#Lanka4
#London
#England
#Palestine
#Court
#Genocide
#L4
Prasu
1 hour ago
பாலஸ்தீன அமைப்பிற்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை லண்டனின் மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
2025, ஜூலை 5 அன்று அமலுக்கு வந்த இந்தத் தடை, நாட்டின் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மேற்படி சட்டமானது பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக் குழுவில் உறுப்பினராக இருந்தாலோ அல்லது அதற்கு ஆதரவளித்தாலோ, பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய ஒரு குற்றச் செயலாக மாற்றியுள்ளது.
இந்நிலையில் இந்த குழு மீதான தடையை எதிர்த்து பாலஸ்தீன அமைப்பின் இணை நிறுவனர் லண்டன் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.அந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே