மரங்களுக்கு பெயர்ப்பலகை சூட்டிய ‘Rain Forest Trust’ – சூழல் பாதுகாப்பில் புதிய மைல்கல்!

#SriLanka #Tree #Rain #Forest #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
மரங்களுக்கு பெயர்ப்பலகை சூட்டிய ‘Rain Forest Trust’ – சூழல் பாதுகாப்பில் புதிய மைல்கல்!

நமது நாட்டிற்கு தேசிய வனவள பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் கொள்கை ஒன்றின் அவசர தேவைப்பாடு காணப்படுகின்றன. சுற்றாடல் சார்ந்து அவ்வப்போது நிகழும் அசாதாரண நிகழ்வுகளை ஒட்டிய தற்காலிக தீர்வுகளாக உருவாக்கப்படும் சுற்றாடல் கொள்கையே நமது நாட்டில் தற்போது காணப்பட்டு வருகின்றன. 

நமது நாட்டில் காணப்படும் சுதேச தாவர விலங்களை அவற்றின் இயற்கையான வாழ்விடங்களுடன் பாதுகாத்தல், நாட்டின் நில மற்றும் நமது கடல் ஆள்புலத்தின் மீதுள்ள வனசீவராசி வளங்களை பாதுகாத்தல் நமது பொறுப்பாகும்.

உயிர்பல்வகைமையை பாதுகாத்தல் இன்றியமையாத ஒரு விடயமாகும். ஆகையினால் நமது நாட்டிற்கு மாறாத தேசிய சுற்றாடல் கொள்கையொன்றை வகுத்துக்கொள்வதன் கூடிய தேவைப்பாடு தற்சமயம் காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Rain Forest Trust அமைப்பினரால் மரங்கள் மற்றும் செடிகளுக்கு பெயர்ப் பலகைகள் பொருத்தி, மக்களை விழிப்புணர்வூட்டி, கொழும்பு சுற்றாடல் பாதுகாப்பு வலயத்தை உருவாக்கும் நோக்கத்தில் சுதந்திர சதுக்க வளாக நடைபாதை அருகில் கடந்த 13ஆம் திகதி காலை இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

தற்சமயம் எல்-நினோ மற்றும் லா-நினா என்ற காலநிலை மற்றும் வானிலை மாற்றங்களால் நாடு எதிர்கொள்ள இருக்கும் ஆபத்தான நிலைமைகள் பற்றி பரவலாக பேசப்படுகின்றன. 

விவசாய நடவடிக்கைகள் சீர்குலைந்து, வாழ்வாதாரம் நலிந்து, நீர் பற்றாக்குறையால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைக்கும் பாதிப்புகள் ஏற்படலாம் என எதிர்வு கூறப்படுகின்றன. இன்று இது தொடர்பில் பெரும் செய்திகள் உருவாகி பேசப்பட்டு வருகின்றன. 

பாராளுமன்றத்தில் நானும், பேராசிரியர் அபேவிக்கிரம அவர்களும் இணை தலைவர்களாக இருக்கும் இலங்கை காலநிலை மாற்றம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தில் ஏற்கனவே இது தொடர்பாக கலந்துரையாடி, முன் அவதானிப்புகளை விடுத்திருந்தோம். 

பாதிப்புகள் நிகழ்ந்த பின்னர் தீர்வுகளைத் தேடுவதை விட இத்தகைய நிகழ்வுகள் நிகழுவதற்கு முன்பே முன்னாயத்த நடவடிக்கைகளை எடுப்பது மிகப் பொருத்தமாக அமைந்து காணப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்வதற்கு காடுகள், நகரங்கள் மற்றும் கிராமங்களில் காணப்படும் இயற்கை மரங்களையும் செடிகளையும் பாதுகாக்க வேண்டும். பொருளாதார இலக்குகளல் நுண்ணியல் மற்றும் பேரியல் பொருளாதாரங்கள் தொடர்பில் பேசினாலும் இன்றைய நிலையில் GDP அளவுகோலுக்கு அப்பால் சென்று மொத்த தேசிய மகிழ்ச்சி குறியீடு (Gross National Happiness) கணக்கிடும் முறைமைக்குள் செல்ல வேண்டும்.

இதில் சுற்றாடல், மரம் செடிகள் மற்றும் விலங்கினங்களினது மதிப்பை கூட்டும் நடவடிக்கையும் இங்கு ஆற்றப்பட வேண்டும். ஒரு நாடாக நாம் எதிர்காலத்தை குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4