நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!

#SriLanka #weather #Rain #ADDA #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!

மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (16) பல இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. 

  மத்திய மலைகளின் மேற்குச் சரிவுகள், தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மணிக்கு சுமார் 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலமான காற்று வீசக்கூடும். 

 இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக குறிப்பிட்ட பகுதிகளில் வீசும் பலமான காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!