36 ஆண்டுகால இடப்பெயர்வு வேதனை: வலி.வடக்கு மக்கள் போராட்டம்!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 months ago
36 ஆண்டுகால இடப்பெயர்வு வேதனை: வலி.வடக்கு மக்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் 36 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், தம்மை சொந்த இடங்களில் மீள்குடியேற்றக் கோரி மக்கள் கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

36 ஆண்டுகளாக தொடரும் வலி.வடக்கு மக்களின் இடம்பெயர்வு வேதனை காணி விடுவித்து மீள்குடியேற்றம் செய்யக் கோரி பலாலி, யாழ். செயலகம் முன்பு போராட்டம்! உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் திகதி வலி.வடக்கு மக்கள் தமது பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். 

அந்த நிகழ்விற்கு இன்றுடன் 36 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமது காணிகள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்றும், இராணுவம் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதனையடுத்து தமது காணிகளில் இருந்து இராணுவத்தை வெளியேற்றி, காணிகளை உரிமையாளர்களிடம் கையளித்து உடனடியாக மீள்குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி, யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாகவும் பலாலி சந்திக்கு அருகிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

போராட்டத்தின் போது காணி விடுவிப்பு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது. 

மேலும் ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதத் தலைவர்களிடமும் மகஜர்கள் வழங்கப்பட்டன. 

இந்தப் போராட்டத்தில் காணி உரிமையாளர்கள், மதத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன், அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!