நெடுந்தீவு மக்களுக்கு தொடரும் நெருக்கடி: வடதாரகை பயணத்தில் குழப்பம்!

#SriLanka #people #Lanka4 #Ship #Neduntheevu #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 days ago
நெடுந்தீவு மக்களுக்கு தொடரும் நெருக்கடி: வடதாரகை பயணத்தில் குழப்பம்!

வடதாரகை படகு மீண்டும் (15) தனது சேவையை ஆரம்பித்த நிலையில் திங்கட்கிழமையான இன்று வேலை மற்றும் இதர தேவைகளுக்காக நெடுந்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி செல்ல என நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மாவிலி இறங்குதுறைக்கு வந்திருந்தாலும் வழமைபோல் நூறு பேரை மாத்திரமே ஏற்றிய படி வடதாரகை படகு குறிகாட்டுவான் நோக்கி புறப்பட்டுச் சென்றது.

இதனால் படகில் ஏற முடியாது இன்று வேலைக்கு செல்ல வேண்டியவர்கள் மற்றும் முதியவர்கள் என பலரும் மீண்டும் மாவிலி இறங்குதுறையில் அந்தரித்து விடப்பட்டிருந்தனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தனியார் படகுகள் சேவையில் ஈடுபட்டு வந்த போதும் மக்கள் இவ்வாறு பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படவில்லை என அங்கிருந்த மக்கள் தெரிவித்தனர்.

முன்பதாக நெடுந்தீவு கடற்போக்குவரத்தில் ஈடுபட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான "வடதாரகை" படகு திருகோணமலையில் உள்ள கப்பல்கள் திருத்துமிடத்தில் திருத்த வேலைகள் இடம்பெற்று முடிவுற்ற நிலையில் காங்கேசந்துறைக்கு கொண்டுவரப்பட்டது. 

இதன்படி நேற்று (14/06) காங்கேசந்துறையில் இருந்து நெடுந்தீவுக்கு வந்து சேர்ந்த நெடுந்தாரகை, இன்று பயணிகள் சேவையை ஆரம்பித்தது வரும்.

திருத்தப் பணிகளுக்காக கடந்த பெப்ரவரி 09 இல் திருகோணமலை நோக்கி புறப்பட்ட வடதாரகை படகு பெப். 17ஆம் திகதி திருகோணமலையை சென்றடைந்து அங்குள்ள கடற்படை படகுகள் திருத்தும் தளத்தில் வேலைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4