சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறு தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!

#SriLanka #exam #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறு தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறு வெளியாவதில் தாமதம் ஏற்படக் கூடுமென இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் இன்று (14.06.2026) தெரிவித்துள்ளது.

 பரீட்சை முடிவுகள் ஆரம்பத்தில் ஜூன் மாதம்-15 ஆம் திகதி வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும் முடிவுகளை இறுதி செய்யும் பணிகள் இன்னும் முழுமையடையவில்லை எனப் பரீட்சைத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார். 

 இதேவேளை, தற்போது பரீட்சை முடிவுகளைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பெறுபேறு உத்தியோகபூர்வமாக வெளியிடப்படுமென நம்புவதாகவும் இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!