நாடளாவிய ரீதியில் சிறப்பு சோதனை நடவடிக்கை - 686 பேர் கைது!
#SriLanka
#Arrest
#Police
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
நாடளாவிய ரீதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின்போது 686 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சோதனைகளின் போது 28,566 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனைகளின் போது, முந்தைய வழக்குகளில் தேடப்பட்டு வந்த 18 பேர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 60 பேரும், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியதாக 171 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், நேற்று “ரட்டம எக" என்ற தேசிய நடவடிக்கையின் கீழ் நடத்தப்பட்ட சோதனைகளில் 926 பேர் கைது செய்யப்பட்டனர். நான்கு சந்தேக நபர்களுக்கு எதிராகக் காவலில் வைப்பதற்கான உத்தரவுகள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே