ஜனாதிபதியென்றால் அது மஹிந்த ராஜபக்ஷதான் - அர்ச்சுனா!!

#SriLanka #ADDA #Archuna #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
ஜனாதிபதியென்றால் அது மஹிந்த ராஜபக்ஷதான் - அர்ச்சுனா!!

அன்றும், இன்றும், என்றும் ஜனாதிபதியென்றால் அது மஹிந்த ராஜபக்ஷதான் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ள விடயம் அரசியல் மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ஏற்பாடு செய்திருந்த ‘மெஹெவரக ப்ரணாமய’ (சேவைக்கு பாராட்டு) நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறான கருத்துக்களை தெரிவித்தார். 

இதன்புாது கருத்து தெரிவித்த அவர்,  “நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தனக்கு எந்தவித பதற்றமும் ஏற்பட்டதில்லை” என தெரிவித்தார். எனினும், மகிந்த ராஜபக்ச முன்னிலையில் பேசுவது முற்றிலும் மாறுபட்ட அனுபவம் என்றும், அவரை நோக்கி உரையாற்றும் தருணம் தனித்துவமான உணர்வை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

 மேலும் ”அன்றும் இன்றும் ஜனாதிபதி யார் என்று நீங்கள் என்னிடம் கேட்டால், நான் மஹிந்த ராஜபக்ஷ என்று மட்டுமே சொல்வேன் ” எனவும் குறிப்பிட்டுள்ளார். 

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் தலைமைத்துவம் மற்றும் அரசியல் ஆளுமை மீதான தனது மரியாதையையே இந்த கருத்து பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 அத்தோடு தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சியைப் பிடிப்பதற்காக புலம்பெயர் தமிழர்களிடம் (டயஸ்போரா) இருந்தே பணம் வழங்கப்பட்டது என்றும்  அவர்கள் பணம் வழங்கி எதிர்பார்த்தது ஈழத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காகத்தான் எனவும் கூறிய அவர்,  தற்போதைய நிலையில் புலம்பெயர் தமிழர்களையும் ஒட்டுமொத்த நாட்டையும் இந்த அரசாங்கம் ஏமாற்றியுள்ளதாகவும் தெரிவித்தார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4