நிலச்சரிவு அபாயம் - 06 குடும்பங்கள் வெளியேற்றம்!
#SriLanka
#Land_Slide
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
நிலச்சரிவு அபாயம் காரணமாக, கொடகவெல, மாகந்துராவின் பஸ்னகந்த பகுதியில் வசிக்கும் ஆறு குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது பெய்துவரும் கனமழையின் விளைவாக, மலை உச்சியில் இருந்த பல பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளதாக பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
மேலும், பாறைகள் சரிந்து விழும் அபாயம் காரணமாக, அப்பகுதியில் உள்ள ஆறு வீடுகளில் வசிக்கும் மக்களை வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்பகுதியின் நிலை குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிடவிருக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே