யாழ்ப்பாணத்தில் சோகம்: காணாமல் போன 6 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு!

#SriLanka #LANKA4 #Old #Missing #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 months ago
யாழ்ப்பாணத்தில் சோகம்: காணாமல் போன 6 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில் நேற்று முதல் காணாமல் போயிருந்த 6 வயது சிறுவன், வீட்டின் அருகிலுள்ள கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புலோலி தெற்குப் பகுதியைச் சேர்ந்த இந்தச் சிறுவன் நேற்று (12) இரவு திடீரென காணாமல் போயுள்ளார். சிறுவன் காணாமல் போனது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, பொலிஸாரும் பிரதேச மக்களும் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்தத் தீவிரத் தேடுதலின் பலனாக, இன்று வீட்டின் அருகில் இருந்த கிணறு ஒன்றில் இருந்து சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் மரணத்திற்கான காரணம் குறித்து பருத்தித்துறை பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!