கடந்த ஆண்டு 946 கோடி லிட்டர் தண்ணீரை பயன்படுத்திய அமேசான் நிறுவனம்

#Amazon #water #Lanka4 #technology #company #L4
Prasu
1 hour ago
கடந்த ஆண்டு 946 கோடி லிட்டர் தண்ணீரை பயன்படுத்திய அமேசான் நிறுவனம்

அமேசான் நிறுவனம் 2025ம் ஆண்டில் உலகளவில் உள்ள தனது தரவு மையத்தை குளிர்விக்க 946 கோடி லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தியதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இது அந்நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள சியாட்டில் பெருநகரம் ஓராண்டில் பயன்படுத்தும் அளவில் சுமார் 5 சதவீதம்தான் எனவும் தெரிவித்துள்ளது.

மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் தங்களின் தண்ணீர் பயன்பாடு குறைவுதான் எனவும் விளக்கமளித்துள்ளது.

தரவு மையங்களின் எண்ணிக்கையும் அவற்றின் சுற்றுச்சூழல் தாக்கமும் உலகளவில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில் அமேசானின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

அமேசான் தனது தரவு மையங்களில் சுமார் 90% நேரங்களில் காற்றைக் கொண்டே குளிர்விப்பதாகவும், கடுமையான கோடைக்கால நாட்களில் மட்டுமே தண்ணீரைப் பயன்படுத்துவதாக அதன் வலைச் சேவைகளின் துணைத் தலைவரான கெர்ரி பெர்சன் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4