பிணையில் விடுதலையானார் சங்கீத்சன்!

#SriLanka #CourtOrder #Kilinochchi #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
பிணையில் விடுதலையானார் சங்கீத்சன்!

கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனுக்கு, பிணையில் செல்ல யாழ். சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் இன்று (12)  அனுமதித்துள்ளது.

சங்கீத்சனுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அல்லாது , தண்டனை சட்ட கோவையின் பிரிவு 120இன் கீழ்  முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு பணித்திருந்தார்.

அதனை அடுத்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து இளைஞன் சார்பில் பிணை விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில், உரிய ஆவணங்கள் மன்றுக்கு கிடைக்காத காரணத்தால், பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

 ஆனாலும் மீண்டும் நகர்த்தல் பத்திரம் ஊடாக  பிணை விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில் , இளைஞனை இன்றைய தினம் பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்தது.

வழக்கின் பின்னணி

யாழில் திருவிழாவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில்,  சங்கீத்சன், பக்தி மற்றும் திரையிசைப் பாடல்களைப் பாடியிருந்தார். 

இந்த காணொளிகளை ஏற்கனவே தனது இசைச் சேகரிப்பில், பாடிய சொல்லிசை எழுச்சி பாடலை இணைத்து, தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். 

 இந்தப் பாடல்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பரவிய நிலையில், குறித்த காணொளி தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர்  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர். 

 விடுதலைப் புலிகளை மீளுருவாக்க முனைவதாக இவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பில் போராட்டங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!