நாளுக்கு நாள் மோசமடையும் சுரேஷ் சலேயின் உடல்நிலை!!
சுரேஷ் சாலேயின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை (12) அவரைச் சந்தித்த பிறகு, அவர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும், அவரது உயிருக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல் இருப்பதாகவும் குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், அஸ்கிரு விகாரையின் மகாநாயக்கரான டாக்டர் வரககோட ஸ்ரீ ஞானரத்ன தேரோவும், சுரேஷ் சாலே தொடர்பாக ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், சுரேஷ் சாலேயின் மனைவி அஸ்கிரு விகாரைக்கு வந்து அவருக்காக ஒரு வேண்டுகோளை விடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அங்கு, அவர் தனது கணவருக்கு நிவாரணம் வழங்க உதவி கோரியதாகவும், அந்த வேண்டுகோள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டதாகவும், ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே