தொடர் மழை: 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
#SriLanka
#weather
#Country
#HeavyRain
#ImportantNews
#Land_Slide
#L4
Lakhi
2 hours ago
நிலவும் மழையுடனான வானிலைக் காரணமாக 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ பிரதேச செயலக பிரிவுக்கும், கண்டி மாவட்டத்தில் தொலுவ பிரதேச செயலக பிரிவுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மடுல்ல, அயகம, இரத்தினபுரி, கொடக்கவெல, கலவாக மற்றும் நிவித்திகல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர பிரதேச செயலக பிரிவுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே