புதிய உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டம் அமுல்: முக்கிய மாற்றங்கள் வெளியீடு!
மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது. இவர்களை முறைப்படியான வரி வரம்பிற்குள் கொண்டு வருவதே இதன் நோக்கமாகும்.
இவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த சேவைக் கொடுப்பனவு 100,000 ரூபாயைத் தாண்டும் போது, அதிலிருந்து 5% வரி கழிக்கப்பட்டு, நேரடியாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் செலுத்தப்படும்.
சொகுசு வாகனங்கள் வாங்குவோர், அதிக கடன் எல்லை (Credit Limit) கொண்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவோர் மற்றும் புதிய வணிகங்களைத் தொடங்குவோர் தங்களின் உண்மையான வருமானத்தை மறைப்பதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை.
இனிமேல் வங்கி கணக்கு ஆரம்பிப்பது முதல் நிறுவனப் பங்குகளைப் பரிமாற்றுவது வரை அனைத்து முக்கிய நிதி நடவடிக்கைகளும் TIN இலக்கத்துடன் இணைக்கப்படுவதால், ஒரு நபரின் பணப் புழக்கத்தை அரசாங்கத்தால் எளிதாகக் கண்காணிக்க முடியும்.
தனிநபர்கள் மற்றும் கூட்டுப்பங்கான்மைகளுக்கு (Partnerships) 15% ஆகவும், அறக்கட்டளைகள் (Trusts) மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு (NGOs) அது 30% ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் மூலமாகச் செய்யப்படும் பெரிய அளவிலான சொத்து மற்றும் மூலதனப் பரிமாற்றங்களுக்கு அதிக வரி வசூலிக்கப்படும்.
வரி செலுத்துவோருக்கான சலுகைகள் மற்றும் காலக்கெடு வட்டித் தள்ளுபடி சலுகை: 2024/25 வரி ஆண்டு வரை சரியாக வரி செலுத்தத் தவறியவர்களுக்கு, அதற்கான வட்டித் தொகையை தள்ளுபடி செய்ய அரசாங்கம் முன்வந்துள்ளது.
இது வரி செலுத்துவோருக்கு சுமையைக் குறைக்கும் ஒரு தற்காலிக சலுகையாகும்.
எனினும், இந்த சலுகையைப் பெற வேண்டுமாயின், நிலுவையில் உள்ள அசல் வரித்தொகை (Principal Tax) அனைத்தும் 2026 டிசம்பர் 2 ஆம் திகதிக்கு முன்னர் முழுமையாகச் செலுத்தப்பட வேண்டும். தவறினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே