ஓமன் கடற்கரையில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் மரணம்
இந்த வாரத் தொடக்கத்தில் ஓமன் கடற்கரைக்கு அப்பால் அமெரிக்கப் படைகள், ஒரு கப்பல் மீது நடத்திய தாக்குதலில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்ததாக கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.
இது ஒரு "சோகமான" இழப்பு என்று குறிப்பிட்ட அமைச்சர், காணாமல் போன மூன்று மாலுமிகளின் உடல்களும் மீட்கப்பட்டுவிட்டதாகக் தெரிவித்துள்ளார்.
பலாவ் கொடியை ஏந்திய 'செட்டபெல்லோ' என்ற எண்ணெய் கப்பல், ஓமன் வளைகுடாவில் அமெரிக்க இராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளானபோது, அதில் 24 இந்தியர்கள் மற்றும் இரண்டு பாகிஸ்தானியர்கள், ஒரு உக்ரேனியர், ஒரு ரஷ்யர் என நான்கு வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 28 பேர் கொண்ட குழுவினர் இருந்தனர்.
கப்பல் தங்கள் அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறியதற்காகவும் , ஈரானிலிருந்து எண்ணெயை ஏற்றிச் சென்றதற்காகவும் அமெரிக்காவின் இலக்கிற்கு உள்ளாகியுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் டெக் கேடட் ஆதித்யா சர்மா, என்ஜின் ஃபிட்டர் சிவானந்த் சௌராசியா மற்றும் தலைமைப் பொறியாளர் பட்நாலா சுரேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே