மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக ஈரான் வன்முறை - பிரித்தானியா கண்டனம்
ஈரான், மேற்கத்திய நாடுகளில் மேற்கொண்டு வரும் வன்முறைச் செயல்களையும் அச்சுறுத்தல்களையும் கண்டித்து பிரிட்டன் உட்பட 22 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகிய பகுதிகளில் சதித்திட்டங்களை அரங்கேற்றுவதற்காக, சர்வதேச மற்றும் உள்ளூர் குற்றவியல் கும்பல்களை ஈரான் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்துவது மிகவும் மோசமான செயல் என்று மேற்படி நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அல்பேனியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரிட்டன், பல்கேரியா, கனடா, செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பிரான்ஸ், பின்லாந்து, ஜெர்மனி, அயர்லாந்து, லாட்வியா, லிதுவேனியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, வடக்கு மாசிடோனியா, நார்வே, போர்ச்சுகல், ஸ்வீடன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளே இவ்வாறு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளன.
“எங்கள் நாட்டு மண்ணில் உள்ள மக்களைக் கொல்ல முயல்வது, கடத்துவது, துன்புறுத்துவது, அச்சுறுத்துவது போன்றவை எங்களது நாட்டின் இறையாண்மையையும் சர்வதேச விதிகளையும் சீர்குலைப்பதாகும்.
எனவே, இந்த நடவடிக்கையை ஈரான் உடன் நிறுத்த வேண்டும், எங்கள் நாடுகளையும் எங்கள் மக்களையும் இந்த அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் நிற்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே