உலக அமைதி குறியீடு - 14 இடங்கள் முன்னேறிய இலங்கை!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Global Peace Index
Thamilini
3 months ago
உலக அமைதி குறியீடு - 14 இடங்கள் முன்னேறிய இலங்கை!

2026 ஆம் ஆண்டுக்கான உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டு, உலகளவில் 14 இடங்கள் முன்னேறி 67வது இடத்தைப் பிடித்துள்ளது.

பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் (Institute for Economics and Peace), பாதுகாப்பு, சமூக நிலைத்தன்மை, மற்றும் நாடுகளுக்குள் நிலவும் உள் மற்றும் வெளி மோதல்களின் அளவுகள் உள்ளிட்ட பல காரணிகளைக் கருத்தில் கொண்டு இந்தக் குறியீட்டைத் தயாரிக்கிறது.

இதற்கமைய இந்த ஆண்டில் உலக அமைதி குறிப்பிடத்தக்க வகையில் வீழ்ச்சிடையந்துள்ளது. 

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, ​​இந்த ஆண்டு உலகின் அமைதி 0.7 சதவீதம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அமைதிக் குறியீட்டில் ஐஸ்லாந்து முதலிடத்திலும், நியூசிலாந்து இரண்டாம் இடத்திலும், சுவிட்சர்லாந்து மூன்றாம் இடத்திலும் உள்ளன.

 163 நாடுகளில்,   ரஷ்யா கடைசி இடத்தையும், சூடான் 162வது இடத்தையும் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!