போலி கனேடிய கடவுச்சீட்டுக்களுடன் இரு இலங்கையர் தாய்லாந்தில் கைது!
போலி கனேடிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி விமானத்தில் ஏற முயன்றதாகக் கூறப்படும் இலங்கை நாட்டவர் ஒருவர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாங்காக்கிற்கு அருகிலுள்ள சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட தாய்லாந்தின் குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லண்டன் செல்லும் விமானத்தில் ஏற முயன்றபோது, பயணி ஒருவர் சமர்ப்பித்த கனேடிய பயண ஆவணத்தில் முறைகேடுகள் இருப்பதாக கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நபர் ஒரு இலங்கை நாட்டவர் என்பதும், பிடிபடாமல் தப்பிப்பதற்காகப் பல பயண வழிகளைப் பயன்படுத்தும் திட்டத்தில் அவர் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்த டான் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
தாய்லாந்தின் குடிவரவு மற்றும் ஆவண மோசடிச் சட்டங்களின் கீழ் சந்தேக நபர்கள் விசாரிக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே