அர்ச்சுனாவிற்கு உயிர் அச்சுறுத்தல்!! தமிழரசு கட்சியினர் மீது குற்றச்சாட்டு!

#SriLanka #Threat #IlankaThamilarasukKadsi #ADDA #Archuna #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
அர்ச்சுனாவிற்கு உயிர் அச்சுறுத்தல்!! தமிழரசு கட்சியினர் மீது குற்றச்சாட்டு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆகவே எனது பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 நாடாளுமன்றத்தின் நேற்று   உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. 

இது தொடர்பில் நான் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் கூறி வருகின்றேன். ஆனால் அது தொடர்பில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை.கவனம் செலுத்தப்படவில்லை. 

எனது பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ள துப்பாக்கி தொடர்பிலும் பிரச்சினைகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால் நான் ஒருபோதும் அதனை முறையற்ற வகையில் பயன்படுத்தியதில்லை. எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது . 

இது தொடர்பில் நான் சிறப்புரிமை பிரச்சினையை முன்வைக்கின்றேன். தமிழரசுக் கட்சியினாலும் சில உள்ளூராட்சி சபை உறுப்பினர்களாலும் எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது.

 இதனால் நான் பாராளுமன்றம் வருவதில் ஒரு மக்கள் பிரதிநிதியாக பொதுமக்களை சந்திப்பதில் அச்சுறுத்தல் உள்ளது. எனவே எனது பாதுகாப்பு தொடர்பில் முறையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!