மரண விசாரணை அதிகாரிகள் இலஞ்சம் கோரினால் முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம் அறிமுகம்!

#SriLanka #Justice #Ministry #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
மரண விசாரணை அதிகாரிகள் இலஞ்சம் கோரினால் முறைப்பாடு அளிக்க விசேட இலக்கம் அறிமுகம்!

மரண விசாரணை அதிகாரிகள் (ISDs) தங்களின் அதிகாரப்பூர்வ கடமைகளைச் செய்வதற்கு லஞ்சம் அல்லது இதர முறையற்ற சலுகைகளைக் கோரும் பட்சத்தில், அதுகுறித்த விபரங்களை உடனடியாக அறிவிக்குமாறு   நீதி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. 

இதற்கமைய  0702724637 என்ற வாட்ஸ்அப் (WhatsApp) இலக்கம் ஊடாக அல்லது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) 1954 என்ற அவசர அழைப்பு இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடு அளிக்க முடியும் என நீதியமைச்சு தெரிவித்துள்ளது. 

 நீதித்துறை நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 108வது பிரிவின் கீழ் மரண விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள் என்றும், தேவைப்படும் எந்த நேரத்திலும் அவர்கள் தங்கள் சேவைகளை வழங்க வேண்டும் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது..

 இந்தச் சேவைகளுக்குப் பதிலாக பணம், பரிசுகள் அல்லது வேறு ஏதேனும் சலுகைகளை வழங்குவது அல்லது ஏற்றுக்கொள்வது சட்டவிரோதமானது என்றும் நீதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

  எனவே, இதுபோன்ற சம்பவங்கள் குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு நீதி அமைச்சு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4