வயிற்றுக்குள் மறைத்து வைத்து ஐஸ் போதைப்பொருள் கடத்தல் - சாரதி மரணம்!

#SriLanka #drugs #Driver #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
வயிற்றுக்குள் மறைத்து வைத்து  ஐஸ் போதைப்பொருள் கடத்தல் - சாரதி மரணம்!

வயிற்றுக்குள் ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்த முயன்ற சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

தங்காலை - மாகும்புர வீதியில் பயணிக்கும் சொகுசு பேருந்தை இயக்கும் 55 வயதுடைய சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த சாரதி தனது இலக்கை அடைந்ததும் திடீரென சுகவீனம் அடைந்துள்ளார். இதனைத் தொடரந்து தங்காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்டப்ட சிறிது நேரத்திலேய அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

பிரேத பரிசோதனையில் அவரின் வயிற்றில் இருந்து இரண்டு போதைப்பொருள் பக்கெட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு பக்கெட்  வயிற்றினுள்ளே வெடித்து விஷமாகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. 

இதன்காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளதாக வைத்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!