மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 hours ago
மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு!

மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்போம் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

 பாராளுமன்றத்தில் நேற்று  (09)   வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.இராதாகிருஸ்ணன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,   தித்வா சூறாவளியினால் பெருந்தோட்டத்துறை சார்ந்த பகுதிகளில் 10310 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்பட்ட இடர் தாக்கங்களினால் 431 லயன் அறைகள் முழுமையாகவும், 2152 லயன் அறைகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. 

 பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணமளிப்பதற்கு அமைச்சரவை தீர்மானத்துக்கமைய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

இதற்கமைய முழுமையாக சேதமடைந்த வீட்டுக்கு 50 இலட்சம் ரூபாவும், பகுதியளவில் சேதமடைந்த வீட்டுக்கு 25 இலட்சம் ரூபாவும் வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4