மத்திய மாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யும்!!

#SriLanka #weather #Rain #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
மத்திய மாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யும்!!

மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று அவ்வவ்போது மழைபெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. 

அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைகளின் மேற்குச் சரிவுகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு சுமார் (40-50) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

நாட்டின் மற்ற பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு சுமார் (30-40) கி.மீ வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும்.

 இடியுடன் கூடிய மழையின் போது, ​​தற்காலிகமாக குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4