பிரான்சில் அரசியல் தஞ்சம் இருக்கும் இலங்கையர் ஒருவரை இலங்கை போலீசார் சட்டபூர்வமாக விசாரிக்கும் சரியான பொறிமுறை எது?

#SriLanka #France #Law #Lanka4 #Asylum Seekers #SriLankan #L4
Prasu
1 hour ago
பிரான்சில் அரசியல் தஞ்சம் இருக்கும் இலங்கையர் ஒருவரை இலங்கை போலீசார் சட்டபூர்வமாக விசாரிக்கும் சரியான  பொறிமுறை எது?

பிரான்சில் அரசியல் தஞ்சம் இருக்கும் இலங்கையர் ஒருவரை இலங்கை போலீசார் சட்டபூர்வமாக விசாரிக்கும் சரியான பொறிமுறை எது?

சரியான பொறிமுறையை கையாளாத சாட்சி அறிக்கை நீதி மன்றத்தில் சட்ட ரீதியாக சமர்ப்பிக்க முடியுமா?

இதை சரியாக செய்யாத சட்டமா அதிபரின் விடயங்கள் கேள்விக்குட்படுத்தபடுமா?

Conducting official investigations or interrogations by foreign law enforcement on French soil without authorization violates French sovereignty. Furthermore, recognized asylees are strictly protected under international and French Law on the Right of Asylum.

அதாவது பிரான்ஸ் நாட்டின் சரியான அனுமதி இன்றி அந்த நாட்டில் அகதி அந்தஸ்து உள்ள ஒருவரை விசாரிப்பது அந்த நாட்டின் இறைமைக்கு எதிரானது.

மேலும், சர்வதேச சட்டங்கள் ( international law ) மற்றும் 1951 Refugee Convention அமைய இது ஒரு சட்ட மீறலாகும்.

பிரான்சின் அகதிகள் பாதுகாப்பு அதாவது பிரெஞ்சு அகதிகள் மற்றும் நாடற்றவர்களுக்கான பாதுகாப்பு அலுவலகம்(OFPRA) நடவடிக்கை எடுக்கலாம் என்று கட்டுரைகள் சொல்கிறது.

"Mutual Legal Assistance(MLA)" இலங்கைக்கும் பிரான்ஸ் நாட்டுக்கும் Mutual Legal Assistance Treaties (MLATs) இருக்கிறதா?

பிரான்சில் இருக்கும் இலங்கை தூதரகத்திற்குள் ஒரு அகதி அந்தஸ்து உள்ள இலங்கையர் செல்வதும் பிரான்ஸ் நாட்டின் அனுமதி இன்றி அறிக்கை கொடுப்பதும் பல சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும்.

முதலில் அந்த நபர் தனது அகதி அந்தஸ்தை இழப்பார். ( The individual risks the revocation of their political asylum and subsidiary protection status, alongside potential deportation proceedings by French authorities, and severe arrest or interrogation upon any return to Sri Lanka).

சர்வதேச நீதிக்கு அமைய எடுக்காத எந்த வாக்கு மூலமும் இலங்கை நீதி மன்றத்தில் செல்லுபடியாகாது.

1951 Refugee Convention, Mutual Legal Assistance (MLA), UN Security Council Counter-Terrorism mandates, INTERPOL Red Notice, Extradition Law No. 8 of 1977 இப்படி பல படிமுறைகள் உண்டு.

அதைவிட இலங்கையின் சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடை சட்டம் (controversial Prevention of Terrorism Act - PTA ) விடயமும் கவனத்தில் எடுக்கப்படும்.

ஆகவே இவை எல்லாவற்றையும் வைத்து பார்க்கும் போது இது ஒரு தனிப்பட்ட தாக்குதலாகவும் ஒரு சட்டத்துக்கு உட்பட்ட விடயம் இல்லாமலும் ஒரு குழந்தை விளையாட்டு போன்றுள்ளது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரித்தனியா போன்ற நாடுகள் ஏற்கனவே தமது அறிக்கையை ISISன் ஆதரவாளர்களால் குண்டு வைக்கப்படாது என்று முடித்திருக்கிறார்கள்.

இந்த நாடுகள் குறிப்பாக அமெரிக்கா தனது குடிமக்களில் ஒருவர் இறந்திருந்தாலும் இந்த விடயத்தை சரியாக கணித்திருக்கும்.

அமெரிக்காவின் அறிக்கைக்கும் இன்று நடைபெறும் விடயத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை அதைவிட நேரெதிராக இருக்கிறது.

எது எப்படி இருந்தாலும் சரியான குற்றவாளி பிடிபடவேண்டும், தண்டனை பெறவேண்டும்.

(இன்னும் நிறைய எழுதலாம், நீங்களும் தேடி வாசிக்கலாம். நான் சட்டம் கற்றவன் அல்ல, நீங்கள் சட்டம் தெரிந்தவர்களுடன் அணுகி இதைப்பற்றி அறிந்திருப்பது அறிவுக்கு நல்லது)

பதிவு: Annesley - Germany

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4