சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாக மாறிய தங்கம்!! முதலீட்டாளர்கள் அதிருப்தி!

#SriLanka #Gold #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாக மாறிய தங்கம்!! முதலீட்டாளர்கள் அதிருப்தி!

இலங்கையில் அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட அதிகப்படியான வாட் (VAT) வரி விதிப்பு காரணமாக, உள்நாட்டு தங்க ஆபரணச் சந்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் சுமார் 75 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக கொழும்பு, புறக்கோட்டை தங்க நகைக்கடை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

நாட்டின் பாரம்பரியக் கைத்தொழில்களில் ஒன்றான தங்க நகை உற்பத்தித் துறை, தற்போதைய கடுமையான வரி விதிப்புக் கொள்கையினால் முழுமையாக முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

 18 சதவீத வாட் (VAT) வரியுடன் சேர்த்து  2.5 சதவீத சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியும்  அறவிடப்படுவதால் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. 

இதற்கமைய சந்தையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 4 லட்சம் ரூபாயை கடந்து, சாதாரண பொதுமக்களுக்கு எட்டாக்கனியாக மாறியுள்ளது. 

வர்த்தகர்களின் அதிகாரப்பூர்வ கணிப்புப்படி, ஒரு பவுன் தங்கத்திற்கு வரியாக மாத்திரம் சுமார் 82,000 ரூபாய் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டியுள்ளது. இந்த பாரிய வரிச்சுமை முழுமையாக நுகர்வோர் மீதே சுமத்தப்படுவதால், பொதுமக்கள் தங்கம் வாங்குவதை முற்றாகத் தவிர்த்து வருகின்றனர். இ

தன் காரணமாக இலங்கையின் நகைக் சந்தை நாளுக்கு நாள் முழுமையாக வீழ்ச்சியடைந்து வருவதுடன், அரசாங்கத்திற்கும் பெருமளவிலான வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!