சுரேஷ் சலே விவகாரம் : சி.ஐ.டிக்கு மனித உரிமை ஆணைக்குழு பிறப்பித்த உத்தரவு!!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Suresh Sallay
Thamilini
3 months ago
சுரேஷ் சலே விவகாரம் :  சி.ஐ.டிக்கு மனித உரிமை ஆணைக்குழு பிறப்பித்த உத்தரவு!!

அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல்   சுரேஷ் சல்லே தொடர்பான தொடர் விசாரணைகள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகள் இந்த வாரம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (HRCSL) முன் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சுரேஷ் சல்லேயின் உறவினர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் அளித்த முறைப்பாட்டிற்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த விடயம் தொடர்பில்  HRCSL ஏற்கனவே ஒரு விசாரணையைத் தொடங்கியுள்ளதாக மனித உரிமைகள் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவ தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக, CID மற்றும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்குச் சென்று வாக்குமூலங்களைப் பதிவு செய்தது உட்பட, மனித உரிமைகள் ஆணைக்குழு கூடுதல் விசாரணைகளையும் நடத்தியுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!