கடும் எச்சரிக்கையுடன் இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நிறுத்திய ஈரான்!

#SriLanka #Israel #Iran #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
கடும் எச்சரிக்கையுடன் இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நிறுத்திய ஈரான்!

 இஸ்ரேல் மீதான தனது தற்போதைய தாக்குதல்களை நிறுத்தி வைத்துள்ளதாக  ஈரானின் பிரதான இராணுவத் தலைமையகம் (கதம் அல்-அன்பியா), அறிவித்துள்ளது.

  இருப்பினும், தெற்கு லெபனான் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்கள் தொடர்ந்தால், ஈரான் இன்னும் கடுமையான மற்றும் சக்திவாய்ந்த தாக்குதலுடன் பதிலடி கொடுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

லெபனானின் பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. 

அதன்படி, நேற்றிரவும் இன்றும் இரு நாடுகளும் ஒன்றையொன்று தாக்கி வருகின்றன. இதற்கிடையில், தெற்கு லெபனானில் இஸ்ரேலிய வீரர்கள் குழு மீது ராக்கெட்டுகளை வீசியதாக ஹிஸ்புல்லா உறுதிப்படுத்தியது. 

 ஈரானின் முக்கிய பெட்ரோலிய இரசாயன ஆலை மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியதைத் தொடர்ந்து, வடக்கு இஸ்ரேலில் உள்ள ஒரு இரசாயன ஆலை மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக ஈரானிய புரட்சிகர காவலர் படை உரிமை கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4