காரைதீவில் மங்கிய வீதி அறிவித்தல் பலகை மற்றும் பாதசாரி கடவை அமைக்க மக்கள் அவசர கோரிக்கை!

#SriLanka #people #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 months ago
காரைதீவில் மங்கிய வீதி அறிவித்தல் பலகை மற்றும் பாதசாரி கடவை அமைக்க மக்கள் அவசர கோரிக்கை!

காரைதீவு பிரதான வீதியில் வெள்ளைப் பாலத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள வீதி திசை நிர்ணய அறிவிப்பு பலகை புகைபிடித்து, நிறம் மங்கிப் போய் காணப்படுகிறது. 

இதனால் அம்பாறை மற்றும் அக்கரைப்பற்றுக்குச் செல்லும் திசைகளைத் தூரத்தில் இருந்து வரும் வாகனச் சாரதிகளால் துல்லியமாக அடையாளம் காண முடிவதில்லை.

சாரதிகள் சிரமம்: நெடுந்தூரப் பயணிகள் மற்றும் சாரதிகள் இதனால் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதால், வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) உடனடியாக இதனைச் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரியுள்ளனர்.

பாதசாரி கடவை கோரிக்கை: இதேவேளை, காரைதீவு மதுபானசாலைக்கு முன்பாக மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் பகுதியில், கடந்த கால விபத்துக்களைக் கருத்திற்கொண்டு புதிய பாதசாரி கடவை (Pedestrian Crossing) ஒன்றையும் அமைத்துத் தருமாறு பொதுமக்கள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!