பாடகரின் விடுதலை ஜனாதிபதியின் கைகளில்: யாழ் சிறையில் சந்தித்த பின் சிறீதரன் எம்பி அதிரடி!
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று திங்கட்கிழமை (08) நேரில் சென்று சந்தித்தார்.
சங்கீத்சன் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், அவரது சொல்லிசைப் பாடலை பாதுகாப்புத் தரப்பிற்கு மொழிபெயர்த்தவர்கள் திட்டமிட்டே தவறான அர்த்தங்களைக் கொடுத்து அவரைப் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிக்க வைத்துள்ளனர்
என்றும் சிறீதரன் குற்றம் சாட்டினார். பயங்கரவாத தடைச்சட்டம் என்பதால் சாதாரண நீதிமன்றங்கள் மூலம் உடனடியாகப் பிணை பெற முடியாது எனச் சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதியின் பொது மன்னிப்பு அல்லது விசேட கருணையின் அடிப்படையில் மட்டுமே அவரை உடனடியாக விடுதலை செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு அவசரக் கடிதம் அனுப்பியுள்ளதாகவும், நாளை ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற அமர்வின் போது ஜனாதிபதியை நேரடியாகச் சந்தித்து சங்கீத்சனின் விடுதலைக்காக அழுத்தங்களைச் செலுத்தவுள்ளதாகவும் எம்பி சிறீதரன் உறுதியளித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே