62 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ்கோடியில் வெளிப்பட்ட பழைய தரைப்பாலம்!

#SriLanka #LANKA4 #Old #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 months ago
62 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ்கோடியில் வெளிப்பட்ட பழைய தரைப்பாலம்!

தமிழ்நாட்டின் தனுஷ்கோடி பகுதியில், 1964ஆம் ஆண்டு ஏற்பட்ட கடும் புயலின் தாக்கத்தால் கடலில் மூழ்கியிருந்த தரைப்பாலத்தின் ஒரு பகுதி, 62 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளிப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முகுந்தராயர் சத்திரம் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக, நீண்ட காலமாக கடலுக்குள் மறைந்திருந்த அந்த பாலத்தின் பகுதி தற்போது மீண்டும் தென்படத் தொடங்கியுள்ளது.

1964ஆம் ஆண்டின் பெரும் புயல் காரணமாக தனுஷ்கோடி நகரம் கடுமையாக சேதமடைந்ததுடன், பல கட்டிடங்கள் மற்றும் அடிப்படை அமைப்புகள் கடலில் மூழ்கியிருந்தன.

இந்நிலையில், பல தசாப்தங்களுக்கு பிறகு அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தரைப்பாலம் மீண்டும் வெளிப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடமும் சுற்றுலாப் பயணிகளிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அந்த பகுதியை பார்வையிட சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தருவதாகவும், விரைவில் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் இதனை ஆய்வு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கடலில் புதைந்திருந்த பழைய கட்டமைப்புகள் இன்னும் வெளிப்படலாம் என சுற்றுலாப் பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

images/content-image/1780706831.jpg


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!