அமெரிக்காவில் தெலுங்கானாவை சேர்ந்த 28 வயது இளைஞர் கொலை
அமெரிக்காவில் வசித்து வந்த தெலுங்கானாவைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் உயர்கல்வியை நிறைவு செய்த இந்தியர் அன்ஷுல் குன்சா அங்குள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.
அதேசமயம், கூடுதல் வருமானம் பெறும் நோக்கில் வார இறுதி நாட்களில் பீட்சா விநியோகப் பணியையும் மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில், நேற்று இரவு பீட்சா டெலிவரி செய்ய செல்லும் போது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
ஆளில்லாத ஒரு இடத்திற்கு பீட்சா டெலிவரி செய்யும்படி வந்த போலி அழைப்பை அன்ஷுல் பெற்றுள்ளார்.
அந்த முகவரிக்கு சென்றபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
---------------------------------------------------------------------------------
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )