சுரேஷ் சாலே கொழும்பு வைத்தியசாலையின் அவசரசிகி்ச்சைப் பிரிவில் அனுமதி!

#SriLanka #Easter Sunday Attack #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
சுரேஷ் சாலே கொழும்பு வைத்தியசாலையின் அவசரசிகி்ச்சைப் பிரிவில் அனுமதி!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சாலே இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த  அவருக்கு   உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் அவர்  கொழும்பு வைத்தியசாலையின்  அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

முன்னதாக அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். 

 அதன்பின்னர், அவர் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் அந்த திணைக்களத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளார். 

 நேற்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தனக்கு சித்திரவதை செய்வதாக கூறி சுரேஷ் சலே உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக வெளிப்படுத்தியிருந்தார். 

 எனினும், நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்ட பொலிஸார், உதய கம்மன்பிலவின் வௌிப்படுத்திய கருத்திற்கு மறுப்புத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

images/content-image/1780706831.jpg


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )




இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4