கோழைத்தனமான, வினைத்திறனற்ற அரசாங்கமுமே ஆட்சியில் உள்ளது - சஜித் சாடல்!

#SriLanka #Sajith Premadasa #government #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
கோழைத்தனமான, வினைத்திறனற்ற அரசாங்கமுமே ஆட்சியில் உள்ளது - சஜித் சாடல்!

மக்கள் மத்தியில் செல்லவதற்கு அச்சப்படும் ஜனாதிபதியும், கோழைத்தனமான, வினைத்திறனற்ற அரசாங்கமுமே ஆட்சியில் உள்ளது. இந்த கோழைத்தனம் மாகாண சபை தேர்தலை நடத்த தயக்கம் காட்டுவதில் அப்பட்டமாக வெளிப்படுகிறது என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார். 

மக்கள் மாகாண சபை தேர்தலை நடத்துமாறு கேட்டாலும், பொதுத் தேர்தலைத் தொடர்ந்து நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஆட்சிக்கு வந்து மிகக் குறுகிய காலத்தில் தற்போதைய அரசாங்கம் சுமார் 23 இலட்சம் வாக்குகளை இழந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

 மேலும் கருத்து வெளியிட்ட அவர், மாகாண சபை தேர்தலை நடத்தினால் மேலும் பல இலட்சம் வாக்குகள் இழக்கப்படும் என்ற அச்சத்திலயே அரசாங்கம் தற்போது நடவடிக்கைகளைச் செய்து வருகின்றது. 

அச்சப்படும், கோழைத்தனமான, வினைத்திறனற்ற, மக்களை ஏமாற்றிய இந்த அரசாங்கத்தால் தற்சமயம் மக்கள் மத்தியில் சென்று மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ள முடியாமல் போயுள்ளது என்று தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

images/content-image/1780706831.jpg


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )




இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4