தனியார் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம் : அசௌகரியங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு!

#SriLanka #government #Bus #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
தனியார் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம் : அசௌகரியங்களுக்கு அரசாங்கமே பொறுப்பு!

தனியார் பேருந்து சேவைகளை 50 சதவீதத்தினால் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் தற்போதைய பொருளாதாரப் பின்னணி மற்றும் டீசல் விலை அதிகரிப்பு அபாயம் காரணமாக,  இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

நுகேகொடையில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். 

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,  பேருந்துகளை நட்டத்துடன் தொடர்ந்து இயக்க முடியாது என்பதால், பேருந்து கால அட்டவணைகளை மாற்றி, பயண முறைகளை குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

 வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவோ அல்லது பொறுப்பான அமைச்சரோ இதுவரை எந்தவொரு பதிலும் வழங்கவில்லை. இந்த மாத இறுதியில் டீசல் விலை மீண்டும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அவ்வாறு வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் பேருந்து கட்டணங்கள் 20% முதல் 25% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

 "ஏற்கனவே 25% பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை. எமது சங்கத்தைச் சேர்ந்த சில பேருந்துகளுக்கு மண்ணெண்ணெய் அடிக்கப்படுகிறது. அதனை நிறுத்தக் கூறியும் அவர்கள் கேட்பதில்லை, அத்தகைய பேருந்துகள் மாத்திரமே தற்போது ஓடிக்கொண்டிருக்கின்றன.

ஆகவே   8 ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து சேவைகளில் இருந்து முற்றாக விலகத் திட்டமிட்டிருந்த போதிலும், தற்போது பேருந்து சேவைகளை 50 சதவீதமாக மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

images/content-image/1780706831.jpg


லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )




இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4