பலத்த காற்று மற்றம் கடல் கொந்தளிப்பாக காணப்படும் - சிவப்பு எச்சரிக்கை அமுலில்!
முல்லைத்தீவு வழியாக திருகோணமலை முதல் காங்கேசன்துறை வரையிலும், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக கல்பிட்டியா முதல் பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
அதேநேரம் அப் பகுதிகளில் பலத்த காற்ற வீசும் எனவும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளதுடன், 'சிவப்பு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினர் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேற்படி சிவப்பு எச்சரிக்கை இன்று (07) காலை 06.30 மணி முதல் நாளை (08) காலை 10.30 மணி வரை அமலில் இருக்கும்.
வானிலை ஆய்வு மையத்தின்படி, காங்கேசன்துறை முதல் மன்னார் வழியாக கல்பிட்டியா வரையிலான கடலோரப் பகுதிகளில், மணிக்கு 60-70 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசுவதால், கடல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
