கிராமப்புற சுகாதார மேம்பாட்டிற்கான புதிய திட்டம்: கிராமங்கள் நோக்கி நகரும் நவீன மருத்துவம்!
அரசாங்கம் மற்றும் மாகாண சபைகளின் கீழ் இயங்கும் முழுமையான வைத்தியசாலைக் கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து, கிராமப்புற மக்களுக்குத் தரமான மற்றும் முறையான சுகாதாரசேவைகளை வழங்குவதற்காக அமைச்சு ஒரு புதிய விசேட திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய மற்றும் மாகாண சபைகளின் கட்டுப்பாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில், மொனராகலை மாவட்டத்தின் வெள்ளவாயா ஆரம்ப வைத்தியசாலையில் விசேட அவதானிப்பு விஜயமொன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்த விஜயத்தின் போது வைத்தியசாலையின் பின்வரும் முக்கிய பிரிவுகள் விரிவாகக் கண்காணிக்கப்பட்டன: வெளிநோயாளிப் பிரிவு மற்றும் மருத்துவமனை வளாகம் விடுதிகள், மருந்தகம் மற்றும் களஞ்சியசாலை அவசர சிகிச்சைப் பிரிவு,
இரத்தப் பரிசோதனை மற்றும் ஆய்வகப் பிரிவுகள்
கண்காணிப்பு விஜயத்தைத் தொடர்ந்து, வைத்தியசாலைக் கட்டுப்பாட்டு அதிகாரி, விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த ஊழியர்களுடனும் விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது.
இந்த புதிய விசேட திட்டமானது கிராமப்புற மக்களுக்கு முறையான சுகாதாரச் சேவைகள் சென்றடைவதை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(வீடியோ இங்கே )
