இரணைமடு சந்தியில் கொண்டுவந்து நிறுத்தப்பட்ட மெகா பேட்டரி சிஸ்டம்!

#SriLanka #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
இரணைமடு சந்தியில் கொண்டுவந்து நிறுத்தப்பட்ட மெகா பேட்டரி சிஸ்டம்!

கொழும்பு துறைமுகத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள Battery Energy Storage Systems (BESS) உபகரணங்கள், வடமாகாணத்தின் மின்விநியோகத்தை வலுப்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது தற்காலிகமாக இரணைமடு சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த உபகரணங்கள் சுண்ணாகம் மற்றும் கிளிநொச்சி உப மின்சார நிலையங்களின் கீழ் காணப்படுகின்ற பிரதேசங்களுக்கு நிறுவப்படுவதற்காக கொண்டு வரப்பட்டவையாகும்.

இலங்கையில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படும் Grid-Scale Battery Energy Storage System திட்டத்தின் முக்கிய கட்டமாக இது கருதப்படுகிறது.

இதேவேளை இவ்வாறான திட்டத்தின் ஊடாக பகல் நேரத்தில் அதிகமாக உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமித்து இரவு நேரங்களில் தேவைக்கு ஏற்ப மீண்டும் விநியோகிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. 

இதனால் மின்சாரத்தில் விநியோகத்தில் ஏற்படும் தடைகள் மற்றும் மின்னழுத்த மாற்றங்கள் குறைக்கப்பட்டுதேசிய மின்சார வலையமைப்பின் முக்கிய நிலைத்தன்மை வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

images/content-image/1780706831.jpg

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!