யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோளம் பகுதியில் தீவிபத்து!

#SriLanka #fire #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோளம் பகுதியில் தீவிபத்து!

யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதியில் கடலரிப்பைத் தடுக்கும் வகையில் இயற்கையாக வளர்ந்திருந்த சம்பு புல்லில் திடீரென நேற்று தீப்பற்றியுள்ளது. 

இது தொடர்பாக பிரதேச மக்களால் வட்டார பிரதேச சபை உறுப்பினர் பூலோலியூர் ரமணன் அவர்களது கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற பிரதேச சபை உறுப்பினர்   பருத்தித்துறை பிரதேச சபை செயலாளருடன் தொடர்பு கொண்டு சம்பவத்தை தெரிவித்து தீயை அணைப்பதற்காக கோரிக்கை விடுத்துள்ளார். 

உடனடியாக செயற்பட்ட பிரதேச சபையின் செயலாளர் தண்ணீர் தாங்கியை அனுப்பியுள்ளார். இந் நிலையில் பிரதேச மக்களுடன் சேர்ந்து பிரதேச உறுப்பினரும், பிரதேச சபை ஊழியரும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

இதன்போது பொலிஸார் மற்றும், கடற்படையினருடன் மேற்படி தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

தற்புாது தீ முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

இதேவேளை  எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்த நிலைமைகளை விரைவாகக் கட்டுப்படுத்துவதற்கு வடமராட்சி பிரதேசத்திற்கு நிரந்தர தீயணைப்பு வாகனம் ஒன்று அவசியமாக உள்ளமை தொடர்பிலும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. 


 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

images/content-image/1780706831.jpg

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4