அணிதிரள்வோம் - பாடகரான சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியல் கவனயீர்ப்பு போராட்டம்!!
#SriLanka
#Protest
#Kilinochchi
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட பாடகரான சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குரல்வளையின் விலங்குடைக்க அணிதிரள்வோம்' எனும் தொனிப்பொருளின் கீழ், கிளிநொச்சி, பழைய கச்சேரிக்கு முன்பாக இந்த கவனயீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதில் அரசியல் பிரதிநிதிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட சகலரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய உள்ளடக்கத்தைக்கொண்ட பாடலைப் பாடிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட அவர். தற்போது யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே