சகாரா பாலைவனத்தில் நீர் இன்றி சிக்கி 49 பேர் மரணம்

#Death #water #Lanka4 #Starvation #L4 #desert
Prasu
1 hour ago
சகாரா பாலைவனத்தில் நீர் இன்றி சிக்கி 49 பேர் மரணம்

நைஜரின் வடக்குப் பகுதியில் உள்ள சகாரா பாலைவனத்தில், லாரி பழுதடைந்ததால் பல நாட்கள் தவித்த 49 பேர் தாகத்தால் உயிரிழந்ததாக நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நைஜரில் உள்ள தங்கள் குடும்பத்தினருடன் இஸ்லாமியப் பண்டிகையான ஈத் அல்-அதாவைக் கொண்டாடுவதற்காக மாலியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது திடீரென லாரி பழுதடைந்துள்ளது.அப்போது குழுவினருக்குத் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட போது 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

"ஓட்டுநர், அவரது உதவியாளர்கள் மற்றும் பயணிகளின் முயற்சிகள் இருந்தபோதிலும், தண்ணீர் கிடைக்காமலும், வாகனத்தைச் சரிசெய்ய முடியாமலும், பயணிகள் கடுமையான வெப்பநிலை மற்றும் விநியோக மையங்கள் இல்லாத ஒரு மோசமான சூழலின் மையத்தில் சிக்கிக்கொண்டனர். 

அங்கு உயிர் பிழைப்பது மிகவும் கடினமாக இருந்தது," என்று ஆளுநரகம் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், அதில் இருவர் 50 கி.மீ (31 மைல்கள்) தூரத்திற்கும் மேலாக நடந்தே ஒரு நீர் ஆதாரத்தை அடைந்து, பின்னர் அங்கிருந்து அஸ்ஸாமகாவிற்குச் சென்று, அங்கு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து உயிர் தப்பியுள்ளனர்.

------------------------------------------------------------------------------

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

♻️வீட்டுக்கடன் (HYPOTHEK) 

 ♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN) 

♻️வீடு வாங்க, (HAUSKAUFEN) 

♻️வீடு கட்ட, (HAUSBAUEN) 

♻️வீடு திருத்த. (RENOVATION) 

SHELVA SWISS 

 IMMO 

 041 790 64 64 

 079 514 64 28

 #SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!