பாடகர் வாகீசனிடம் ஏனைய ஈழத்து பாடகர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்
PTA சட்டம் பாயாமல் ஈழ தழிரின் வலிகளை கடத்தும் பாடல்களை எவ்வாறு பாட வேண்டும் என்றும் எழுத வேண்டும் என்றும் கற்றுக்கொள்ள வேண்டும் நாங்கள் யூரோப்பில் இல்லை இலங்கை நாட்டில் இருக்கிறோம் என்பதை இளஞர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
அதைவிட முக்கியமாக எங்கள் பின்னனி என்ன எங்கள் குடும்ப சூழல் என்ன நாங்கள் எதை கதைக்குறோம் என்பதில் தெளிவுவேண்டும் வாழ்கையை தொலைத்து விடாதீர்கள்.

இது நாலு பக்கம் கடலால் சூழப்பட்ட ஒரு குட்டி தீவு என்றோ ஒரு நாள் கடல்தாய் ஆட்டம் தாங்கமல் உள்ளே இழுத்துக்கொள்வாள் ஆக நீங்கள் வாழுங்கள் இனிமேலும் ராமசாமி , குப்புசாமியின் பிள்ளைகள்தான் போரட வேண்டும் என்று இல்லை.
நீங்கள் எப்போது வாழபோகிறீர்கள் மேல் மட்டத்தில் இருப்பவர்கள் உங்களை உணர்ச்சி பொங்க வைத்து விட்டு வெளியேறி விடுவார்கள் நட்டாற்றில் நிற்கபோவது நாங்கள்தான் ஏன்?
பழைய போராழிகள் கோவில்களில் யாசகம் எடுப்பதை பார்த்தும்மா உங்களுக்கு யதார்த்த நிலை விளங்க வில்லை போராடி போரடி அழிந்து விடாதீர்கள் இனிமேல் ஆவது சுகபோக வாழ்கை வாழும் கிழட்டு தமிழ் மேட்டுக்குடியின் பிள்ளைகள் போராட்டும் நண்பா.

நன்றாக படியுங்கள் வேலை செய்யுங்கள் ஒரு தொழிலை பழகுங்கள் வாழுங்கள் உணர்ச்சிகளின் உச்சம் சென்று அழிந்து விடாதீர்கள் நாங்கள் இழந்தது போதும் இனி இழக்க வேண்டாம் இப்போது இதை எழுதிக்கொண்டு இருக்கும் நான் கூட உங்களுக்கு உதவமுடியாது என்பதே யதார்த்தமான உண்மை.
அந்த அளவு பணபலமோ அரசியல் பலமோ என்னிடம் இல்லை உண்ணைபோல் நானும் ஒரு சாதாரண தமிழ் பெடியன். சிலவற்றை கதைக்க எழுத போராட என்றுதான் நாங்கள் வாக்களித்து அரசியல் தலைவர்களை தேர்ந்து எடுத்துள்ளோம் அவர்கள் செய்ய வேண்டிய வேலையை நாங்கள் ஏன் செய்யவேண்டும் ??

சில சிறப்பு உரிமைகள் அவர்களிடத்தில் இருக்கிறது அவர்கள் கதைக்கலாம் அதை பார்த்து பொதுவெளியில் நீங்கள் கதைத்தால் உங்கள் வாழ்கையை இழப்பீர்கள்.
இப்போது கைது செய்யப்பட்டு இருப்பவரை எனக்கு நீண்டகாலமாக தெரியும் டிக் டாக்கில் ஆனால் இதுவரை அவர் பாடல்களை நான் பகிர்ந்தது இல்லை காரணம் இதுதான் இங்கே ஒரு புளுத்தியர் அவருக்கு வாழ்த்தும் போட்டு வீரனடா என்று ரைட்டப்மும் எழுதி கவணம் தம்பி என்டார் நான் நினைக்கிறன் முலுச்சிலவில இப்ப தம்பிக்காக வக்கீல்களை பிடித்திருப்பார் என்று அல்லது அதே போல இப்ப இனவாத அரசாங்கம் என்டு ஒரு ரைட்டப் போட்டு படுத்திருப்பான் வேற யாரும் இல்லை ( ஜெயலலிதா அம்மாட மகன்தான்).

இன்னொன்டு சொல்லுறன் இப்ப அவன் உனக்கு இனி வெளிநாடு தாரளமா போலாம் அதைவிட அவன்ட பாட்டில நாலுவரிய போட்டு பயர் விட்டிருப்பான் அவன் என்னை பிளாக் பண்ணிட்டான் வேணும் என்டால் பாருங்கோ இது கட்டாயம் அவன் பதிவுகளில் எங்காவது இருக்கும் இது ஒரு சின்ன உதாரணம்தான் குறை சொல்லும் எண்ணமோ வன்மமோ கோபநிலையோ இல்லை.
ஆக அவன் அவன் சொந்த வாழ்கைய பாத்திட்டு போய்டுவான் நீங்கள் வானத்தை பாத்திட்டு நிக்க வேண்டியதுதான், என் நண்பர்கள் உறவுகள் எனக்கு தெரிந்தவர்கள் என்னை தெரிந்தவர்கள் அண்ணா தம்பி அக்கா என்று யாரையும் இனிமேல் நான் விடமாட்டேன் தெளிவு படுத்திக்கொண்டே இருப்பேன் உண்மையை சொல்லிக்கொண்டே இருப்பேன் யதார்தத்தை கடத்துவன்
------------------------------------------------------------------------------
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )