அனுர ஆட்சிலும் சுதந்திரமாக பாடமுடியவில்லை பேச முடியவில்லை - சிறீதரன்

#SriLanka #Lanka4 #AnuraKumaraDissanayake #sritharan #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
அனுர ஆட்சிலும் சுதந்திரமாக பாடமுடியவில்லை பேச முடியவில்லை - சிறீதரன்

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று மாலை கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பினை நடாத்தியிருந்தார். குறித்த ஊடக சந்திப்பில் தற்போது கத்தோலிக்க மதகுருமார்கள் மத்தியில் பேசுபொருளாக இருக்கும் அருட்தந்தை ஜீவந்த பிரீஸ் மே 18அன்று நினைவேந்தல் நிகழ்வில் தமிழர்களுக்கு நடந்தது. இனப்படுகொலை என்பதை தெரிவித்திருந்தார்.

இதன் மூலம் சகோதர மொழி பேசக்கூடிய ஒருவர் இவ்வாறு சொல்கின்ற விடயம் முக்கியமானது. நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக மிகவும் துணிச்சலாக 146000பேர் இறந்த மற்றும் காணாமல் போனமை தொடர்பாக மன்னார் ஆயர் இராஜப்பு ஒரு அறிக்கையை சமர்ப்பித்திருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பேசி வரும் கர்தினால் மல்கம் இரஞ்சித் ஆண்டகை தமிழர்களுக்கு நடந்த அநியாயங்களை பற்றி பேசவில்லை ஆட்சி மாறினாலும் முன்னைய மகிந்த, மைத்திரி ,சந்திரிக்கா,ரணில் ஆட்சியைப்போல் அனுர ஆட்சிலும் சுகந்திரமாக பாடமுடியவில்லை பேச முடியவில்லை விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்யும் நோக்கில் பாடல் பாடியதாக தெரிவித்து கைது செய்யப்பட்டு 16நாட்கள் சிறையில் கிளிநொச்சி இளைஞன் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆட்சி மாறினாலும் தொடர்ந்து இனவாதமே காணப்படுகின்றது. தமிழரசுக்கட்சியின் நிர்வாக செயலாளர் குலநாயகம் தனது அதிப்தி கடிதத்தை தனக்கும் அனுப்பியுள்ளதாகவும் நீண்ட காலமாக தமிழரசுக்கட்சியை தக்க வைக்கும் நோக்குடன் பதவிகள் ஒன்றும் பெறாது.

பாடுபட்டவர் பாராளுமன்ற தேர்தலின் பின்பு கிடைக்கப்பட்ட தேசிய பட்டியல் ஆசனத்தை ஒரு ஆண்டுக்கு வழங்க வேண்டும் என நான் அரசியல் குழுவிடம் பிரேரித்திருந்தேன். கட்சி பிரச்சனையை கட்சிக்குள்ளே தீர்க்க முயற்சிப்போம் என தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

♻️வீட்டுக்கடன் (HYPOTHEK) 

 ♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN) 

♻️வீடு வாங்க, (HAUSKAUFEN) 

♻️வீடு கட்ட, (HAUSBAUEN) 

♻️வீடு திருத்த. (RENOVATION) 

SHELVA SWISS 

 IMMO 

 041 790 64 64 

 079 514 64 28

 #SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!