இலங்கைச் சிறுவர்களுக்கு ஆபத்து: நாட்டை உலுக்கும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை!

#SriLanka #children #Country #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
இலங்கைச் சிறுவர்களுக்கு ஆபத்து: நாட்டை உலுக்கும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை!

கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் (Wasting) பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களைக் கொண்ட நாடுகளின் வரிசையில், தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கை இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் 40% க்கும் அதிகமான குடும்பங்கள் தங்களின் தினசரி உணவிற்காகப் போதிய வருமானமின்றித் திணறி வருகின்றன. இதனால், பால் மா, முட்டை, மீன், இறைச்சி போன்ற புரதச்சத்து (Protein) நிறைந்த உணவுகளைப் பெற்றோருக்கு வாங்க முடியாமல் போயுள்ளது.

ஊட்டச்சத்து மிக்க உணவுகளுக்குப் பதிலாக மலிவான மாப்பொருள் (கார்போஹைட்ரேட்) நிறைந்த உணவுகளையே பெற்றோர் பிள்ளைகளுக்கு அதிகளவில் வழங்குகின்றனர். 

இது தற்காலிகமாகப் பசியைப் போக்கினாலும், பிள்ளைகளின் மூளை மற்றும் உடல் வளர்ச்சியைப் பெருமளவில் பாதிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாகப் பாடசாலை மாணவர்களின் கவனக்குவிப்புத் திறன், ஞாபகசக்தி மற்றும் கற்கும் திறன் ஆகியவை வீழ்ச்சியடைந்துள்ளன.

பிறக்கும்போதே குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களிடையே தொற்றுநோய்களுக்கு ஆளாகும் வீதமும் அதிகரித்துள்ளது.

கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளுக்குத் தடையின்றித் 'திரிபோஷா' (Thriposha) வழங்குவதற்குச் சுகாதார அமைச்சு அவசரப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

உலக உணவுத் திட்டம் மற்றும் யுனிசெப் (UNICEF) ஆகிய சர்வதேச அமைப்புகள் இணைந்து, இலங்கையின் வறிய பாடசாலை மாணவர்களுக்கான இலவச மதிய உணவுத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த நிதியுதவிகளை வழங்கி வருகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

♻️வீட்டுக்கடன் (HYPOTHEK) 

 ♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN) 

♻️வீடு வாங்க, (HAUSKAUFEN) 

♻️வீடு கட்ட, (HAUSBAUEN) 

♻️வீடு திருத்த. (RENOVATION) 

SHELVA SWISS 

 IMMO 

 041 790 64 64 

 079 514 64 28

 #SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN

லங்கா4 (Lanka4)



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!