சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை; காலியில் சுவருடன் மோதியது ஹம்பாந்தோட்டை பேருந்து!

#SriLanka #Bus #Lanka4 #Driver #wall #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை; காலியில் சுவருடன் மோதியது ஹம்பாந்தோட்டை பேருந்து!

இன்று (04) அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதிகாலை நேரம் என்பதால் வீதி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் சாரதி, தூக்கக் கலக்கத்தில் இருந்தமை விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.

விபத்து நடந்த உடனடியாகவே அவர் காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காயமடைந்த மூவரில் இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் அடங்குவர். அவர்கள் உடனடியாக அங்கிருந்தவர்களின் உதவியுடன் காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவர்களில் ஒருவரது நிலைமை சற்றே கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த தடல்ல பகுதி வளைவு மற்றும் குறுகிய வீதிப் பகுதியாகும். 

பேருந்து சுவருடன் மோதி வீதியின் ஒரு பகுதியை மறித்து நின்றதால், காலி - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்துக்குக் காலை வேளையில் தற்காலிகப் பாதிப்பு ஏற்பட்டது. 

பின்னர் பொலிஸார் கிரேன் (Cranes) மூலம் பேருந்தை மீட்டனர். பேருந்தின் முன்பகுதி மற்றும் பக்கவாட்டுப் பகுதி முழுமையாக நசுங்கியுள்ளதுடன், மோதியதில் அருகில் இருந்த தனியார் காணியின் மதில் சுவரும் பலத்த சேதமடைந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

♻️வீட்டுக்கடன் (HYPOTHEK) 

 ♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN) 

♻️வீடு வாங்க, (HAUSKAUFEN) 

♻️வீடு கட்ட, (HAUSBAUEN) 

♻️வீடு திருத்த. (RENOVATION) 

SHELVA SWISS 

 IMMO 

 041 790 64 64 

 079 514 64 28

 #SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN

லங்கா4 (Lanka4)



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!