நாவலப்பிட்டியில் கொடூரம்: முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்து மாணவன் உட்பட மூவர் பலி!
இன்று (04.06.2026) காலை சுமார் 6:45 மணியளவில், மாப்பாகந்தை பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நகரை நோக்கி முச்சக்கர வண்டி பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனும், 34 மற்றும் 51 வயதுடைய இரு பெண்களும் அடங்குவர். பலியானவர்களில் மாணவனின் தாயாரும் ஒருவர் என ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீதியோரத்தில் இருந்த ஒரு பெரிய யூக்கலிப்டஸ் (Eucalyptus) மரமே இவ்வாறு முறிந்து விழுந்துள்ளது. இந்த மரம் நீண்டகாலமாக உளுத்துப் போய், ஆபத்தான நிலையில் இருந்ததாகப் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த மரம் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக முன்னரே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பலமுறை அறிவித்தும், அதனை அகற்றுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். விபத்து நடந்தவுடன் பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து மரத்தை வெட்டி அகற்றி, முச்சக்கர வண்டியில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.
எனினும், அவர்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளனர். முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்த போதிலும், அதன் சாரதி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )