நுவரெலியாவில் 100 மி.மீற்றர் கனமழை பெய்ய வாய்ப்பு!

#SriLanka #weather #Rain #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
நுவரெலியாவில் 100 மி.மீற்றர் கனமழை பெய்ய வாய்ப்பு!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. 

இன்றைய வானிலை தொடர்பில் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்   அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என  தெரிவித்துள்ளது. 

 இதற்கிடையில், மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மி.மீ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம்   மத்திய மலைகளின் மேற்குச் சரிவுகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு சுமார் 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நாட்டின் மற்ற பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு சுமார் 30-40 கி.மீ வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 மேலும், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

---------------------------------------------------------------------------------

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

♻️வீட்டுக்கடன் (HYPOTHEK) 

 ♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN) 

♻️வீடு வாங்க, (HAUSKAUFEN) 

♻️வீடு கட்ட, (HAUSBAUEN) 

♻️வீடு திருத்த. (RENOVATION) 

SHELVA SWISS 

 IMMO 

 041 790 64 64 

 079 514 64 28

 #SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4