பிறந்த திகதி 09 (9,18,27) அன்று பிறந்தவர்களில் யாருக்கு அதிர்ஷ்டம் அதிகம்? பலன்கள் உள்ளே
எண்களின் கடைசி எண்ணாக விளங்குவது ஒன்பதாம் எண்ணாகும். ஒன்பதாம் எண்ணும் மற்ற எண்களைப் போலவே தனித்தன்மை வாய்ந்ததாகவே உள்ளது.
நவரசங்கள், நவதானியங்கள், நவரத்தினங்கள் என ஒன்பதாம் எண்ணிற்கும் தனிச்சிறப்பு உண்டு. ஏன் உடலில் வாசல்கள் கூட ஒன்பது உண்டு.
ஒன்பதாம் எண் செவ்வாயின் ஆதிக்கத்திற்குட்பட்டதாகும். எந்த மாதத்திலும் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களாக கருதப்படுகிறார்கள்.
ஜாதகக் கட்டத்தில் ஒன்பதாம் இடம் பாக்கிய ஸ்தானத்தை குறிக்கும். எனவே ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களை பாக்கியசாலிகள் எனலாம்.
குணநலன்கள்
ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் பெரும்பாலும் எல்லா விஷயங்களிலும் பொது அறிவு நிரம்பப்பெற்றிருப்பார்கள். கலா ரசிகர்களாகவும், விநோத பிரியர்களாகவும் இருப்பார்கள்.
எந்த விஷயத்தைப் பற்றி பேசினாலும் தமக்குத் தெரிந்த விஷயம் போலவே காட்டிக் கொள்வார்கள். பிறர் கூறும் விஷயங்களை அப்படியே அங்கீகரிக்காமல் தனக்கென ஒரு கொள்கையை வைத்திருப்பார்கள்.
வெகுளியாகவும் கபடமற்றும் காணப்படும் இவர்கள் எந்தவொரு விஷயத்தையும் ரகசியமாக வைத்திராமல் மனம் திறந்து பேசுவார்கள்.
வாத பிரதிவாதங்களில் திறமையோடு வாதித்து தனது அபிப்ராயத்தை அங்கு நிலைநாட்டி எதிரிகளை வெற்றி கொள்ளும் ஆற்றல் இருக்கும்.
ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் இயற்கையிலேயே அஞ்சா நெஞ்சமும் தைரியமும் படைத்தவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் காரியவாதிகள். ஆதலால் வீண் பழி சொற்களுக்கு செவி சாய்க்கமாட்டார்கள். இவர்களது சுயேற்சையான சுபாவத்தையும், அகங்கார குணத்தையும் கண்டு இவர்களை நேசிப்பவர்கள் கூட சில சமயம் வெறுப்படைந்து விடுவார்கள்.
உடல் நிலை ஆரோக்கியம்
ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் நடுத்தரமான உயரமும், கம்பீரமான தோற்றமும் கொண்டவர்களாக இருப்பார்கள். நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும், சுருட்டையான தலைமுடியும் இருக்கும்.
ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்களாதலால் இவர்களுக்கு பெரும்பாலும் உடலில் காயங்கள், இரத்தக் கசிவுகள் போன்றவை ஏற்படக்கூடும். முடிந்தவரை மது, மாமிசம் போன்றவற்றை தவிர்த்தால் உடல் நிலை சிறப்பாக அமையும்.
குடும்ப வாழ்க்கை
ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு காதல் திருமணம் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அதில் பாதிப் பேருக்கு சுகமான சுபிட்சமான வாழ்க்கையும், வாழ்க்கை துணையால் முன்ன«ற்றங்கள் போன்றவை அமைந்தாலும் பாதிப்பேருக்கு
குடும்ப வாழ்க்கையில் சிக்கல்களும் குழப்பங்களும் உண்டாகிறது. இதனால் விரக்தியான மனோநிலைகளும் ஏற்படுகிறது.
உடன் பிறந்தவர்கள் மீது இவர்களுக்கு பாசம் அதிகம் இருந்தாலும் அவர்களால் ஒரு பிரயோசனமும் உண்டாவதில்லை. இவர்கள் எதிலும் முன் யோசனையுடன் திட்டங்களை தீட்டி செயல்பட்டால் குடும்ப வாழ்வில் முன்னேற்றமும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும்.
இவர்களுக்கு தேவைக்கேற்ப பணவசதி ஏற்படுமே தவிர சேமிக்கும் அளவிற்கு இருக்காது. வரவுக்கேற்ற செலவுகளும் உண்டாகும்.
தொழில்
ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் எந்த தொழிலை ஏற்றுக் கொண்டாலும் அதை திறம்பட நிர்வாகிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.
இவர்களுக்கு பெரும்பாலும் அரசாங்கத்தில் அதிகாரம் செய்யக்கூடிய உயர் பதவிகளை கிடைக்கும். பலர் ஆயுதங்களை தாங்கி பணி செய்யக்கூடிய மிலிட்டரி, போலீஸ் துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள்
போர்க்கலைகள், மல்யுத்தம், மலையேறுதல், விளையாட்டுத் துறைகளில் பயிற்றுவிக்கும் பணி போன்றவற்றிலும் ஈடுபடுவார்கள்.
சிலர் மருத்துவ துறையில் அறுவை சிகிச்சை நிபுணராக விளங்குவார்கள். நண்பர்கள், பகைவர்கள் ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் வீரத்தின் சின்னமாக விளங்குகிறார்கள்.
இவர்களுக்கு 1,2,3 ம் எண்ணில் பிறந்தவர்கள் நண்பர்களாக இருப்பார்கள். 4,5,7 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுடன் ஒத்தப்போகமுடியாது.
செவ்வாய்க்குரிய காலம் மார்ச் மாதம் 21ம் தேதி முதல் ஏப்ரல்19ம் தேதி வரையிலும், அக்டோபர் மாதம் 23ம் தேதி முதல் நவம்பர் 21ம் தேதி வரையிலும் செவ்வாயக்குரிய காலமாகும்.
அதிர்ஷ்டம் தருபவை
- அதிர்ஷ்ட தேதி - 9,18,27
- அதிர்ஷ்ட நிறம் - சிவப்பு
- அதிர்ஷ்ட திசை - தெற்கு
- அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய்
- அதிர்ஷ்ட கல் - பவளம்
---------------------------------------------------------------------------------
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )