குவைத் விமான நிலைய தாக்குதல் - மூன்று இலங்கையர்கள் காயம்
குவைத்தின் சர்வதேச விமான நிலையத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் காயமடைந்த 63 பேரில் மூன்று இலங்கை நாட்டினரும் அடங்குவர் என குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
குவைத்தின் பிரதான விமான நிலையத்தில் (T1) நடந்த தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயமடைந்ததாகவும், அவர்கள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையை குவைத்திற்கான இலங்கை தூதர் டாக்டர் லக்ஷிதா ரத்நாயக்க மற்றும் தொழிலாளர் துறை தலைவர் எம். ஆர். சி. பி. ஏகநாயக்க ஆகியோர் பார்வையிட்டதாகவும் தூதரகம் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடந்தபோது, சம்பந்தப்பட்ட இலங்கையர்கள் விமான நிலையத்தில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் கீழே விழுந்த கண்ணாடித் துண்டுகளால் அவர்களின் தலை மற்றும் பிற பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டதாகவும் தூதர் ரத்நாயக்க தெரிவித்தார்.
தற்போதைய நிலைமை தொடர்பாக குவைத் அரசாங்க அமைப்புகளால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைக் குறித்து குவைத்தில் உள்ள அனைத்து இலங்கையர்களும் அறிந்திருக்க வேண்டும் என்றும் இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொள்கிறது.
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
---------------------------------------------------------------------------------
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )